சினிமா

கர்ணன் படக்குழு எடுத்த அதிரடி முடிவு; ஏமாற்றத்தில் ரசிகர்கள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார். படத்தின் அணைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 

கர்ணன் படம் ஏப்ரல் 9 தேதி வெளியாகும் என அறிவிக்கப்ட்டுள்ள நிலையில்  படத்தை விளம்பரம் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது படக்குழு. அண்மையில் வெளியான “கண்டா வரச்சொல்லுங்க, பண்டாரத்தி புராணம், திரௌபதையின் முத்தம்  ஆகிய  பாடல்கள்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்ததோடு மட்டுமின்றி சர்ச்சைகளில் சிக்கியது.

குறிப்பாக பண்டாரத்தி புராண பாடல் குறிப்பிட்ட சமூகத்தினரை குறிப்பதால் பின்னர் மஞ்சனத்தி என்று மாற்றப்பட்டது. படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால் இதற்கு மேல் எந்த சிக்கலிலும் சிக்கிவிட கூடாது என்பதற்காக கர்ணன் படத்தின் ட்ரைலரை வெளியிட வேண்டாம் என படக்குழு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ALSO READ  பிரபல பாடகி நித்யஸ்ரீக்கு விபத்தில் தலையில் அடி:

#karnan #mariselvaraj #dhanush #karnantamilmovie #cinema #cineupdate #cinematrending #tamilthisai #karnanteaser #kollywood #cinemas #thanu #karnan4thsinglesong

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இயக்குநராகும் யுவன் சங்கர் ராஜா…விரைவில் அறிவிப்பு

Admin

தெலங்கானா என்கவுண்டர் குறித்து நடிகை சமந்தா ட்விட்டர் பதிவு…

Admin

நடிகை ‘கயல் ஆனந்தி’ திடீர் திருமணம்..!  

News Editor