சினிமா

தெலுங்கில் ரீமேக்காகும் ‘கர்ணன்’ திரைப்படம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். படத்தின் முக்கிய கதாபத்திரத்தில் லால், யோகி பாபு, கௌரி கிஷன், லட்சுமி பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார்.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

கர்ணன் திரைப்படம் கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல பிகா பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை படம் பார்த்த அனைவரும் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.  

இப்படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படத்தின் தெலுங்கு உரிமையை பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் கைப்பற்றியுள்ளார். மேலும் இப்படத்தில் அவரது மகன் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ்  தனுஷ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ALSO READ  இ-பதிவில் குழப்பம்; புதிய மாற்றம் செய்த தமிழக அரசு !

தனுஷ் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியீட்டுக்கு தயாராக்கவுள்ள நிலையில் தற்போது கர்ணன் திரைப்படமும் ரீமேக் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அப்பாவாகிறார் பிக்பாஸ் வின்னர்

News Editor

சத்தமில்லாமல் நடந்த நிச்சயதார்த்தம்: தொழிலதிபரை மணக்கும் பிரபல நடிகை..

naveen santhakumar

எல்லாருக்கும் ஒவ்வொரு கவலை….நடிகை பாவனா-க்கு இதுதான் கவலையாம்….

naveen santhakumar