சினிமா

கர்ணன் படத்தை பாராட்டிய திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். படத்தின் முக்கிய கதாபத்திரத்தில் லால், யோகி பாபு, கௌரி கிஷன், லட்சுமி பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார்.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கர்ணன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் முதல் பிரபலகள் வரை படம் பார்த்த அனைவரும் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் மேயரும் , சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியம் கர்ணன் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன்

அதில், “பரியேறும் பெருமாளில் பாமர மக்களின் விடுதலை உணர்ச்சியைப் படைத்தவர், கரியேறும் கர்ணனில் இன்னும் அதை கம்பீரமாய் வடித்திருக்கிறார். தடுக்கப்பட்டவரின் உரிமைகளுக்கு தாளேந்திய மாரி செல்வராஜ் வாளேந்தியும் வென்றிருக்கிறார். வாழ்த்துகள்”  என பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 

ALSO READ  பிரம்மாண்ட படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க போகும் நடிகை ஷாலினி :

#karnan #mariselvaraj #dhanush #karnantamilmovie #cinema #cineupdate #cinematrending #tamilthisai #karnanteaser #kollywood #cinemas #thanu #karnan4thsinglesong #KarnanFormTomorrow #Thaanu


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விக்ரமுடன் இணையும் மாஸ்டர் பட வில்லன் :

Shobika

‘சக்ரா’ படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

News Editor

கொரோனா தடுப்பூசி குறித்து தனக்கும் தயக்கம் இருந்தது; நடிகை திவ்யதர்ஷினி !

News Editor