சினிமா

கே.ஜி.எப் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியீடு…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 20 கே.ஜி.எப் திரைப்படம் தமிழில் வெளியானது. அதன் பின்  இந்த  படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து கே.ஜி.எஃப் 2  படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது, மேலும் இதில் சஞ்சய் தத், பிரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

கொரோனா நெருக்கடிநிலை காரணமாக இப்படத்தின் பணிகளைத் திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் எழுந்தது. படப்பிடிப்பு பணிகளைத் தொடங்குவதற்கு கிடைத்த அனுமதியையடுத்து, படத்தின் பணிகள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  

கே.ஜி.எப் 2  படத்தின் பர்ஸ்ட் லுக் முன்னரே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில், படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை கடந்த மாதம் படக்குழு வெளியிட்டது. அதன்படி, படத்தின் டீசரானது வரும் 8-ஆம் தேதி காலை 10.18 மணிக்கு வெளியாகவுள்ளது.

ALSO READ  "RRR" படத்தின் அறிவிப்பு...குஷியில் ரசிகர்கள் !

படத்தின் டீசர் வெளியீட்டிற்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளதால் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக படக்குழு தனது  ட்விட்டர் பக்கத்கில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளது. அதில், “மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் கதவைத் திறப்பதற்கான கவுண்டவுன் இப்போது தொடங்குகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கே.ஜி.எப் படத்தின் நடிகரான யாஷ் பிறந்தநாளான ஜனவரி 8 ஆம் தேதி அன்று படத்தின் டீசர் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ  நேரடி இந்தி சினிமாவில் சாய் பல்லவி !

#kgf2 #yash #kgf #kgfteaserjan08 #Tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“சர்வர் சுந்தரம்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor

‘ஒத்த செருப்பு’ படத்திற்காக புதுச்சேரி அரசு சார்பில் இயக்குநர்  பார்த்திபனுக்கு விருது 

News Editor

தனுஷின் முந்தைய படங்களின் சாதனையை முறியடித்த “கர்ணன்”..!

News Editor