சினிமா

சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்டார் யுவன்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ALSO READ  லெஜண்ட் சரவணன் படத்தின் முக்கிய அப்டேட் :

மாநாடு படத்தின் முதல் பாடல் ரம்ஜான் பண்டிகையன்று வெளியிடப்படும் என அறிவித்திருந்த படக்குழு, அந்த சமயத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணமடைந்ததால், அப்பாடல் வெளியீட்டை தள்ளிவைத்தனர். 

இந்நிலையில், தள்ளிவைக்கப்பட்ட மாநாடு படத்தின் பாடல் வெளியீடு குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். மிக விரைவில் அப்பாடல் வெளியிடப்படும் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் மாநாடு படத்தின் முதல் பாடல் ஓரிரு வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தின் அடுத்த போஸ்டர் வெளியீடு !

News Editor

கமிட் ஆனார் பல்வாள் தேவன்…

naveen santhakumar

கொரோனா நிவாரண நிதி நடிகர் அஜித் 1.25 கோடி….

naveen santhakumar