சினிமா

“இதுவே என்னுடைய சிறந்த பிறந்தநாள்”;லோகேஷ் கனகராஜ் ட்வீட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தினை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக்  மீடியா இணைந்து தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

ALSO READ  கர்ணம் மல்லேஸ்வரி பயோபிக்கில் ரகுல் பிரீத்சிங்... 

இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார் லோகேஷ் கனகராஜ். அவருக்கு திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் வந்து குவிந்தன.

லோகேஷ் கனகராஜ் தன்னுடைய இவ்வருட பிறந்தநாளை, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர், லிங்குசாமி, கௌதம் மேனன், சசி, வசந்தபாலன் ஆகியோருடன் இணைந்து கொண்டாடியது தெரியவந்துள்ளது. அக்கொண்டாட்ட நிகழ்வின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத்  லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் ‘இதுவே என்னுடைய சிறந்த பிறந்தநாள்’ எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ  'சிதம்பரம் ரெயில்வே கேட்' படத்தின் இசையை வெளியிட்ட பிரபல இயக்குனர் !

#master #mastermovie #tamilcinema #tamilmovie #cinema #cineupdate #lokeshkanagaraj #gauthamvasudevmenon #lingusamy #manirathnam #shankar #vasanthabalan #tamilthisai #lokeshkanagarajHBD


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜய் பற்றி ஒரு வார்த்தை: ட்விட்டரில் ஷாருக்கான் அளித்த பதில் …!

News Editor

இந்தியில் ரீ மேக்காகும் ஒத்த செருப்பு

Admin

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்சம் நிதி உதவி!…

naveen santhakumar