சினிமா

தோனி பட நடிகர் மரணம்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘எம்.எஸ்.தோனி’ படத்தில் தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் சென்ற ஆண்டு தன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் இதைத் தற்கொலை என உறுதிப்படுத்தினர். இது ஹிந்தி திரையுலகில் மிகுந்த அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் ‘எம்.எஸ்.தோனி’, ‘கேசரி’ போன்ற படங்களில் நடித்த நடிகர் சந்தீப் நஹார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 32 வயதான அவரின் மரணத்தை மும்பை போலீசார் நேற்று மாலை உறுதிப்படுத்தினர்.அவர் இந்தத் தற்கொலைக்கு காரணம் தனிப்பட்ட குடும்பப் பிரச்சினைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் இறப்பதற்கு முன் இதுகுறித்தப் பதிவும் மற்றும் விடியோவாகவும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இது பாலிவுட் பட உலகில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘எம்.எஸ்.தோனி’ படத்தில் தோனியின் நண்பராக சந்தீப் நஹார் நடித்துள்ளார். மேலும் அக்‌ஷய் குமாரின் ‘கேசரி’ படத்திலும் நடித்துள்ளார். 


Share
ALSO READ  ஒரு குட்டிக்கதை பாடலை பாடியது யார் தெரியுமா?
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காஜலுக்கு கெட்டிமேளம்:

naveen santhakumar

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணாவத் மரியாதை……..

Admin

நம் செயல்களே சமூகத்தில் நம் மீது மரியாதையை கூட்டும்; நடிகர் அஜித் அறிக்கை !

News Editor