நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். அதனையடுத்து யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
“மாநாடு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி ரசிகர்களிடையே அதிக கவனத்தையும் நல்ல வரவேற்பையும் பெற்றது. இதனையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
கடந்த சில தினங்களாக நடந்து வந்த படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை படக்குழு தற்போது நிறைவு செய்துள்ளது. இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக உறுதி செய்த இயக்குநர் வெங்கட் பிரபு படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
#maanaadu #cinemaupdate #CinemaNews #maanaadu #simbu #silambarasan #venketprabhu #tamilmovie #tamilthisai #KalyaniPriyadharsan #Tamilmovie #cinema #CinemaUpdate #CinemaBuzz #kollywood #CineUpdate #CookWithComaliPugazh