சினிமா

‘மாநாடு’ படத்தின் டீசரை வெளியிடும் பிரபலங்கள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் பொங்கல் அன்று வெளியான ஈஸ்வரன் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர்  சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன் நடிக்கிறார். அதனையடுத்து யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். 

ALSO READ  "உயர்ந்த இடத்தில் இருந்து வந்த பாராட்டு"; மோகன் லால் நெகிழ்ச்சி !

கடந்த நவம்பர்  மாதம் “மாநாடு” படத்தின் ஃப்ர்ஸ்ட லுக் வெளியாகி ரசிகர்களிடையே அதிக கவனத்தையும் நல்ல வரவேற்பினையும் பெற்றது. அண்மையில் யுவன் இசையில் வெளியான மோஷன் போஸ்டருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.  மாநாடு திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படக்குழு இன்று 2.34 மணிக்கு படத்தின் டீசரை வெளியிடவுள்ளது. அதனையடுத்து மாநாடு படத்தின் மலையாள டீசரை நடிகர் பிரிதிவிராஜ் , ஹிந்தி மொழி டீசரை பிரபல இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷிப், கன்னட மொழியில் நடிகர் சுதீப் , தெலுங்கில் நடிகர் ரவி தேஜா, தமிழில் இசையமைப்பாளர் ஏ,ஆர்,ரகுமான்    வெளியிடவுள்ளனர். 

ALSO READ  கொரோனா தொற்றால் பிரபல இசையமைப்பாளர் உயிரிழப்பு !


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொஞ்சும் கிளி…கேத்ரின் தெரசாவின் அழகிய புகைப்படங்கள்

Admin

‘உங்களை நடிகர் என நினைத்தேன்’ தனுஷ் குறித்து பிரபல பாலிவுட் இயக்குநர் கருத்து !

News Editor

அதுல்யாவின் இந்த படங்களுக்கு அள்ளும் லைக்ஸ்

News Editor