சினிமா

மாஸ்டர் மகேந்திரனை வாழ்த்திய விஜய்சேதுபதி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 1994ஆம் ஆண்டு இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான நாட்டாமை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன் இப்படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதனையடுத்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

ALSO READ  கடுப்பான சித்தார்த்...சாவடிச்சிடுவேன் ஓடிடு...


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் பொங்கலன்று வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இளம் வயது விஜய்சேதுபதியாக பவானி எனும் கதாபாத்திரத்தில் நடித்தவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது


இவர் அண்மையில் கார் ஒன்றை வாங்கி இருந்தார். மாஸ்டர் மகேந்திரன் அந்த காருடன் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்தார். பின்பு அந்த காரை ஓட்டிப்பார்த்த விஜய் சேதுபதி, அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மாஸ்டர் மகேந்திரன் என்னுடைய பவானி..விஜய்சேதுபதி அண்ணா என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  சாட்  வித் "செல்லப்பிள்ளை" அருண் சந்திரன்!!!!

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜி.வி பிரகாஷ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

News Editor

குடும்பங்களை குதூகலப்படுத்த வருகிறது அசத்தல் கதையம்சம் கொண்ட “மிடில்கிளாஸ்”:

naveen santhakumar

100 ஏழை மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்…சோனு சூட்டிற்கு குவியும் பாராட்டுகள்!

News Editor