சினிமா

“சித் ஸ்ரீராம் குரல் எதையும் சிறப்பானதாக ஆக்கும்” : மிஸ்கின் பாராட்டு 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மிஸ்கின், இவர் முகமூடி, துப்பறிவாளன், பிசாசு போன்ற பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். அதனையடுத்து மிஸ்கின் கடைசியாக  ‘சைக்கோ’ என்ற படத்தினை உருவாக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சங்களை பெற்றது.


அதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஆகையால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை  இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. பின்பு இயக்குனர் மிஸ்கின் அந்த தகவலை உறுதி செய்திருந்தார்.

அதன்பின் மிஸ்கின்  பிசாசு 2 படத்தின் பணிகள் தொடங்கியுள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் இப்படத்திற்கு, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். ராக்போர்ட் எண்டர்டைன்மென்ட் சார்பில் டி.முருகானந்தம் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது இந்த மாதம் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்து இருந்தது. 

ALSO READ  பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடரும் கைது; அதிரடி காட்டிய சி.பி.ஐ..! 

இந்நிலையில் பிசாசு 2 படத்தில் பிரியங்கா ஒரு பாடலை பாடியுள்ளார். இவர் இளையராஜா இசையில் ’நாச்சியார்’ படத்திலும் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ’மாம்’ படத்திலும் பாடியிருக்கிறார், என்பது குறிப்பிடத்தக்கது.அதனை தொடர்ந்து தற்போது பிசாசுக்கு 2 படத்திலும் பாடியுள்ளார். 

அதனையடுத்து இப்படத்தில் சித் ஸ்ரீராம் ஒரு பாடலை பாடியுள்ளார். இவர் மிஸ்கினின் முந்தைய படமான சைக்கோ படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய இரண்டு பாடல்களும் ஹிட் அடித்தது. அதைபோன்றே பிசாசு 2 படத்திலும் ஒரு மெல்லிசை பாடலை பாடியுள்ளார். 

ALSO READ  சீரியலிலிருந்து விலகிய பிரபல நடிகை- அவருக்கு பதில் யார் ???

#mysskin #sidhsriram #tamilsongs #tamilthisai #pisasu2 tamilmovie


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவிலிருந்து மீண்ட ஜெனிலியா:

naveen santhakumar

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor

காட்டேரி பட தயாரிப்பாளரை கண்டித்த திருப்பூர் சுப்பிரமணியம்..!

News Editor