சினிமா

‘பிரேமம்’ பட இயக்குநருடன் கைகோர்க்கும் நயன்தாரா 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2015ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் நிவின் பாலி, மடோனா செபாஸ்டின், சாய்பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில்  மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தினை இயக்கியிருந்தார்.

பின்னர் படம் வெளியாகி அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்று மிகப் பெரிய வெற்றிப் படமாக மாறியது.  குறிப்பாக இந்தப்படத்தில் நிவின் பாலி சாய் பல்லவி சம்பந்தப்பட்ட காட்சிகள் இளைஞர் மத்தியில் மிகப்பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இயக்குனர் அல்போன்ஸ் இயக்கவுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

இந்த தகவலை இயக்குனர் அல்போன்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் கூறியதாவது “லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எங்களது ‘பாட்டு’ திரைப்படத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன், பகத் பாசில் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். இந்த படம் தொடர்பான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


Share
ALSO READ  வித்தியாசமான கெட்டப்பில் தோன்றும் விஜய்சேதுபதி; இணையத்தில் ட்ரெண்டாகும் "யாதும் ஊரே யாவரும்" கேளிர் பட டீசர் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘டாக்டர்’ பட அப்டேட்; இணையத்தில் வைரலாகும் “so baby” பாடல் !

News Editor

பிரபல ஹாக்கி வீரரின் வாழ்க்கை  வரலாறு திரைப்படமாக உள்ளது 

News Editor

விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்..!

News Editor