சினிமா

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் நெற்றிக்கண்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘அவள்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மிலிந்த் ராவ் நயன்தாராவை வைத்து ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இப்படத்தில் பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்துள்ள நயன்தாரா, பார்வை குறைபாடு இருந்தாலும் தனது அறிவாற்றலால் கொடூரமான சீரியல் கில்லரை எப்படி கண்டுப்பிடிக்கிறார்…??? என்பதே கதைக்களம் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தில், நயன்தாராவின் சண்டைக்காட்சிகளும் ரசிகர்களின் பாராட்டுக்களைக் குவிக்கும் என்று கூறி வருகிறது படக்குழு.

ALSO READ  சுல்தான் படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு !

சமீபத்தில் பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘இதுவும் கடந்து போகும்’ பாடல் கார்த்திக் நேத்தாவின் வரிகளில் வெளியாகி கவனம் ஈர்த்தது. கொரோனாவால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் ’நெற்றிக்கண்’ படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான, அதிகாரபூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

லாஸ்லியாவின் பிறந்தநாளை முன்னிட்டு “ஃப்ரெண்ட்ஷிப்” படக்குழு கொடுத்த அப்டேட் !

News Editor

“உயர்ந்த இடத்தில் இருந்து வந்த பாராட்டு”; மோகன் லால் நெகிழ்ச்சி !

News Editor

டிஸ்கவரி சேனலில் நடிகர் ரஜினிகாந்த்

Admin