தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது நெற்றிக்கண் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் மலிந்த் ராவ் இயக்கி வருகிறார். இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற அவள் படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அஜ்மல், மணிகண்டன் பட்டாம்பி, இந்துஜா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். கிரிஷ் இசைமைக்கும் இப்படத்தை நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் தறிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் கிரிஷ் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் நெற்றிக்கண் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நெற்றிக்கண் படத்தின் முதல் பாடலான இதுவும் கடந்து போகும் என்ற பாடல் விரைவில் வெளியாகும் என நடிகை நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.