சினிமா

பொங்கலுக்கு நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியீடு..!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அஜித் நடிக்கும் வலிமை திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கியுள்ள வலிமை படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன.

வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹியூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளனர். சுமித்ரா, யோகி பாபு, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்களை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில் வலிமை படம் 2022ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் அறிவித்துள்ளார்.

ALSO READ  சிம்பு நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியாகியது..!

பொங்கல் வெளியீடு என்பதால் சில மாதங்கள் கழித்தே டீஸர், ட்ரெய்லர் உள்ளிட்டவற்றை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

நீண்ட நாட்களாக வலிமை படத்தின் அப்டேட்டுக்காக காத்துக் கொண்டு இருந்த ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் #வலிமை பொங்கல் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாலிவுட்டில் முதல் படம் இயக்கும் விஷ்ணு வர்தன் !

News Editor

‘RRR’ படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியீடு !

News Editor

குளியலுக்காக இருபதாயிரம் ருபாய் செலவு செய்த நடிகை :

Shobika