மலையாள இலக்கியத்தில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஓ.என்.வி. விருது. இவ்விருது மலையாள கலைஞர்களும் ஒருவரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி குறுப் அவர்களின் நினைவாக கடந்த 2017 ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
ஓ.என்.வி விருது அகில இந்திய அளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் தேசிய விருதாக கருதப்படுகிறது. தற்போது இந்த விருது தமிழ் இலக்கியவாதி கவிஞர் வைரமுத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது ஒரு சிலை மற்றும் ஒரு தகுதி பட்டயம் அத்துடன் 3 லட்சம் ரொக்க பணம் வழங்கப்படும். சிறந்த மலையாள படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இவ்விருது முதல் முறையாக மலையாளி அல்லாத இலக்கியவாதிக்கு கொடுப்பது இதுவே முறையாகும்.
கவிஞர் வைரமுத்துக்கு விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து திரைபிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அந்தவகையில் மலையாள நடிகை பார்வதி பாலியல் குற்றச்சாட்டு உள்ள ஒருவருக்கு ஓ.என்.வி. பெயரில் விருது வழங்குவது அவமரியாதை என்று கூறியுள்ளார். மேலும் பல மலையாள பிரபலங்களும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், விருதுகள் குழுவின் பரிந்துரையின்படி இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.