சினிமா

சிம்புவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்  சிம்பு நடிப்பில் போடா போடி திரைப்படம் வெளியாகியிருந்தது. இதில் சிம்புவுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு தரண்  குமார் இசையமைத்திருந்தார்.

மக்கள்  மத்தியில் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அதனை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வருகிறார்.  இந்நிலையில் தற்போது போடா போடி படத்தின் இரண்டாம்  பாகத்தில் நடிகர் சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தினை பதம் குமார் தயாரிக்க உள்ளதாகவும், இதில் புதுமுக நாயகி ரித்திகா பால் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார் “போடா போட்டி” இரண்டு படத்தின் கதை உருவாகி விட்டதாகவும்,

ஆனால் இயக்குனர் யார் என்பது சஸ்பென்ஸ் என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் பதம் குமார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், முதல் பாகத்தைப் போலவே இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் தான் படமாக்கப்பட உள்ளது. எனவும், தற்போது மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வரும் சிம்பு அடுத்ததாக ராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து போடா போடி 2 படத்தில் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது


Share
ALSO READ  “விஸ்வாசம்” படத்திற்காக அஜித்தை பாராட்டிய விஜய்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மீது நடிகர் விஷால் புகார்மனு :

Shobika

பிரபல நடிகர் ராஜபாபு உடல்நலக்குறைவால் மறைவு

naveen santhakumar

நவராசாவை தொடர்ந்து மற்றொரு ஆந்தாலஜி படம் OTT-யில்……..

Shobika