சினிமா

ஆபாச பட விவகாரம்- ஊடகங்கள் மீது ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி வழக்கு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தனது கணவர் குறித்தும் தன்னை குறித்தும் தவறான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் மீது 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Porn film case: Shilpa Shetty files defamation suit of ₹25 crore against 29  media personnel & media houses – Way2Barak

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இந்த விவாகரத்தில் ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு உள்ளதா என்பதை தொடர்பாக அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், தனது கணவர் ராஜ் குந்த்ரா மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தவறான செய்தி வெளியிட்ட 29 ஊடகங்களின் ஊழியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது நடிகை ஷில்பா ஷெட்டி மும்பை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

ALSO READ  சர்ச்சையை கிளப்பும் ஃபேமிலி மேன் 2 தொடர்; விளக்கமளித்த சமந்தா !

இதன்படி, சில ஊடக நிறுவனங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அனைத்து அவதூறான செய்திகளையும் நீக்க வேண்டும் மற்றும் ரூ.25 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நடிகை ஷில்பா ஷெட்டி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கு நாளை மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமன்னா-க்கு கொரோனா:

naveen santhakumar

நண்பரை கைப்பிடித்த “பூவே பூச்சூடவா” நடிகை…..

naveen santhakumar

நடிகை தமன்னா தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்தபோது, திடீரென சரிந்து விழுந்த வீடியோ…

naveen santhakumar