சினிமா

நிக்கி கல்ராணியிடம் பணமோசடி செய்த ஹோட்டல் உரிமையாளர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

நடிகை நிக்கி கல்ராணி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையை இருந்து வருகிறார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் வெளியான டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமா திரையில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் இவரின் நடிப்பு பெரிது பேசப்பட்டது. அதனையடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Sanjana Galrani

இவரின் சகோதரி சஞ்சனா கல்ராணி கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். நடிகை நிக்கி கல்ராணி குடுப்பதினார் பெங்களூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி பெங்களூரு அம்ருதஹள்ளி  காவல் நிலையத்தில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் மீது புகார் அளித்துள்ளார். அதில், கோரமங்கலம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருபவர் நிகில், இவருடைய ஹோட்டலில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதலீடு செய்திருந்தேன்.

இதற்காக மாதம் ஒரு லட்சம் கொடுப்பதாக கூறியிருந்தார். ஆனால் நிகில் இதுவரை ஒரு மாதம் கூட பணம் குடுத்தது கிடையாது. மேலும் என்னுடன் வாங்கிய 50 லட்சத்தையும் திரும்பி கொடுக்கவில்லை. இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது எனக்கு சரியாக பதிலளிக்கவில்லை. என்னிடம் வாங்கிய 50 லட்சம் பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்துள்ளார். அதனால் அவரின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ  2021-2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் விவரம் !

இதனையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள அம்ருதஹள்ளி போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். 

#Nikkigalrani #Tamilcinema #Cinemanews #CinemaUpdate #cinenews #Kollywood #ActressNikkigalrani #sanjanagalrani #TamilThisai ##cinematrending #darling #Tamilcinema #Tamilmovie

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகை ஆத்மியாவிற்கு விரைவில் கெட்டிமேளம் :

naveen santhakumar

மம்முட்டியுடன் இணையும் மஞ்சுவாரியர்!

Admin

முதல் முறையாக மலையாள படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் !

News Editor