சினிமா

தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் திருமணம் முடிந்துவிட்டது:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தம்பிக்கோட்டை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். இதையடுத்து விஜய் ஆண்டனியின் சலீம், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை போன்ற படங்களை தயாரித்தார்.

இவர், கடந்த 2016-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். பின்னர் மருது, ஸ்கெட்ச், பில்லா பாண்டி, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

அவருக்கும், சீரியல் நடிகை திவ்யாவுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் சிலபல கருத்து வேறுபாடு காரணமாக இவர்களது திருமணம் நின்று போனது.

ALSO READ  இயக்குநரை திடீரென மணந்த கவுரவ நடிகை :

இந்நிலையில், நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கும், சினிமா பைனான்சியரான மது என்பவருக்கும்  கடந்த சில நாட்களுக்கு முன்பு ரகசியமாக திருமணம் நடந்துள்ளது. 

அந்த திருமண விழாவில் வெறும் 15 பேர் தான் கலந்து கொண்டார்களாம். இந்த தகவல் கசிந்ததையடுத்து, தனது திருமண புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என ஆர்.கே.சுரேஷ் பதிவிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கார்த்தியுடன் நடிக்கும் கர்ணன் படத்தின் நாயகி !

News Editor

கெளதம் மேனன், செல்வராகவன் வரிசையில் இணைந்த பிரபல இயக்குனர்!

News Editor

தீபிகா படுகோன் தனது பிறந்த நாளை ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பியவர்களுடன் கொண்டாடினார்

Admin