சினிமா

எனக்கு கொரோனா இல்லை; ராதிகா சரத்குமார் விளக்கம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடங்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.  மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக சினிமா பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ராதிகா சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகை ராதிகா, எனக்கு கொரோனா இல்லை என மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அனைவரின் அன்புக்கும் நன்றி. எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எல்லாம் இல்லை. தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு உடம்பு வலி மட்டுமே. என் உடல்நலம் மற்றும் வழக்கு குறித்து ஆன்லைன் மீடியாக்கள் கண்டதையும் எழுதுகின்றன. நாங்கள் மேல் நீதிமன்றங்களில் முறையிடுவோம். நான் வேலைக்கு திரும்பிவிட்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  அஜித் பிறந்தநாளுக்கு இரண்டு அப்டேட்; வலிமை படக்குழு அறிவிப்பு !

#corona #Coronavirus #covid19 #TamilThisai #Tamilcinema #Cinema #CineUpdate #Tamilmovie #ishwaryalekshmi #cinema #Vishal #Dhanush #coronapositive #RadhikaSarathkumar


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சத்தமில்லாமல் நடந்த நிச்சயதார்த்தம்: தொழிலதிபரை மணக்கும் பிரபல நடிகை..

naveen santhakumar

அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor

‘கர்ணன்’ படக்குழு கொடுத்த அப்டேட் !

News Editor