சினிமா

‘அண்ணாத்த’ படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற ரஜினி !

இயக்குநர்  சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 

இமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வரும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். கொரோனா அச்சுறுத்தல், ரஜினி உடல்நிலை பாதிப்பு ஆகியவற்றால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அண்மையில்  இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னையில் பெரிய செட் அமைத்து எஞ்சியுள்ள காட்சிகளை படமாக்கியது. 

இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் செல்லவுள்ளார். அதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அதன் பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்துவிட்டு சென்னை கிளம்ப படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

#Rajinikanth #Annaththe #TamilThisai #Cinema #CinemaUpdate #rajinikanth #Siva #Kollywood #keerthysuresh #Rajinikanth #Annaththe

Related posts

மதம் மாறியதாக வதந்தி… விஜய் சேதுபதி கொடுத்த பதிலடி

Admin

விஜய் சேதுபதியை புகழ்ந்த த்ருவ் விக்ரம் !

News Editor

Youtube ட்ரெண்டிங்கில் ‘ஜெய் சுல்தான்’ பாடல்..! 

News Editor