சினிமா

டான் படத்தின் அப்டேட்டை வெளியிட்டது படக்குழு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் தமிழ் சின்னமாவில் நடிகராக அறிமுகமானார். அதனையடுத்து பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவரது நடிப்பில், ‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

ALSO READ  தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகும் கொரோனா வரலாம்; நடிகர் விவேக் !

இதனையடுத்து சிபி சக்கரவகார்த்தி இயக்கத்தில் டான் என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார் இவர் இயக்குனர் அட்லீயின் மெர்சல், மற்றும் பிகில் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இப்படத்தை லைகா புரடக்‌சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரடக்‌சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

இந்நிலையில் டான் படத்தில் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யா மற்றும் சமுத்திரக்கனி நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இவர்களை தொடர்ந்து டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளார்.

ALSO READ  'தட்டி புட்டா' பாடலை வெளியிட்ட மாமனிதன் படக்குழு !

இவர்கள் இருவரும் இணைத்து நடித்துள்ள டாக்டர் திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடிக்கவுள்ளார் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் மேலும் படத்தில் முனீஷ்காந்த், காளி வெங்கட், பாலா உள்ளிட்டோரும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வேம்புலி கதாபாத்திரத்தை அஜித்துக்கு அர்ப்பணிக்கிறேன்….லவ் யூ சார்….!!!

Shobika

ஹாலிவுட் வரை ஹிட்டடித்த மாஸ்டர் ‘குட்டிக்கதை’ பாடல்

Admin

நடிகை ராய்லட்சுமியின் நீச்சல் உடை போட்டோஷீட்

News Editor