சினிமா

சிவகார்த்திகேயன் மெச்சுரிட்டி ஆகிவிட்டார்: ’வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ உறுதி – பொன்ராம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ 2-ம் பாகம் எடுக்கவே கூடாது என்று சிவகார்த்திகேயன் கூறிய நிலையில், “வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பார்ட் 2 வருவது உறுதி என்று இயக்குநர் பொன்ராம் கூறியுள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்' 2-ம் பாகம் வருவது உறுதி: இயக்குநர் பொன்ராம் |  vvs2 will happen for sure says director ponram - hindutamil.in

பொன்ராம் இயக்கத்தில் 2013 இல் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் சாதாரண ஹீரோவாக இருந்த சிவகார்த்திகேயனை, மாஸ் ஹீரோவாக்கி அவரது திரைப்பாதையை தீர்மானித்த படம்.

படத்தில் இருந்து சிவகார்த்திகேயன் மாற்றம்: இயக்குநர் கூறிய காரணம்:  ஆச்சரியத்தில் ரசிகர்கள்- Dinamani

சிவகார்த்திகேயன் -சூரி-சத்யராஜ் கூட்டணி காமெடியில் அதகளப்படுத்தியிருப்பார்கள். பலருக்கும் ஃபேவரைட் படமாக உள்ளது. பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் ரஜினி முருகன், சீமராஜா படங்கள் வந்தாலும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஒரு பென்ச் மார்க்காகவே உள்ளது.

ALSO READ  கார் விபத்து: யாஷிகா அளித்த வாக்குமூலம்!
வி.வி.எஸ் பார்ட் – 2 உறுதி… எஸ்.கே இதற்கு செட் ஆக மாட்டார்…! - CineReporters

அண்மையில், ‘டாக்டர்’ படத்தின் வெளியீடு குறித்த பத்திரிகையாளர் கேள்வியின்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ வருமா?” என்றக் கேள்விக்கு ”’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இரண்டாம் பாகம் எடுக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

அது ஒரு எபிக் படம். நாங்கள் எங்களையே அறியாமல் ஜாலியாக எடுத்த படம். அதைத் திரும்ப எடுக்கவே முடியாது என்றுக் கூறியிருந்தார்.

ALSO READ  அடுத்த புட்டபொம்மா- புதிய சென்சேஷன் செல்லம்மா க்ளிம்ப்ஸ் ரிலீஸ் !

இந்த நிலையில், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பார்ட் 2 வருவது உறுதி, சிவகார்த்திகேயன் சார் மெச்சூரிட்டி (maturity) ஆகிவிட்டார், அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் எடுப்போம். போட்றா வெடிய என்று பதிலடி கொடுத்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தொற்றால் பிரபல இசையமைப்பாளர் உயிரிழப்பு !

News Editor

அப்துல் கலாம் பயோபிக்-ன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.

naveen santhakumar

ஷாருக்கான்-அட்லீ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியீடு !

News Editor