சினிமா

வலைத்தளத்தில் வருவதை நம்ப வேண்டாம்; நடிகை அஞ்சலி 

கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெளியான அங்காடி தெரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் அஞ்சலி. இந்த படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பெரிது பேசப்பட்டது.

அதனையடுத்து எங்கையும் எப்போதும், மங்காத்தா, சேட்டை, கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். நடிகை அஞ்சலி தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அஞ்சலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளம் மற்றும் இணையத்தளங்களில் செய்திகள் வெளியானது. இதை அறிந்து அதிர்ச்சியடைந்த அஞ்சலி, தனது சமூக வலைதள பக்கத்தில், எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை. நான் சந்தோஷமாக இருக்கிறேன். இணையத்தளங்களில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளியானதை அறிந்தேன். அது முற்றிலும் பொய்யான செய்தி. நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் யாரும் அதை நம்ப வேண்டாம்’ என்று பதிவு செய்திருக்கிறார்.   

Related posts

கொரோனா நிவாரண நிதி நடிகர் அஜித் 1.25 கோடி….

naveen santhakumar

விஜய்சேதுபதி மறுத்த வில்லன் வேடம்; பிரபல நடிகர் ஒப்பந்தம் ! 

News Editor

வாமா…..மின்னலுக்கு…டும் டும் டும்….

naveen santhakumar