சினிமா

தமிழக அரசியலை அலசும் வெப் சீரிஸ்.. இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேப்பிடல் ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள வெப் சீரிஸ் ஒன்றை எஸ்.பி.பி.சரண் இயக்கவுள்ளார். அதிகாரம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வெப் தொடரின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமானது. அதிகாரம் – அரசியலை மையமாகக் கொண்ட பரபரப்பான கதைகளத்துடன் தயாராகிறது.

பரபரப்பான இந்த இணையத் தொடரில் பிக்பாஸ் பிரபலம் அபிராமி வெங்கடாச்சலம் நடிக்கவுள்ளார். நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்த அபிராமி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானர். பிக் பாஸில் இவரை மையமாகக் கொண்டு பல விவாதங்கள் எழுந்தது. அதிகாரம் தொடரில் முக்கிய வேடத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

இந்தத்தொடரில் தேவ், ஏ.எல்.அழகப்பன், இளவரசு, ஜான் விஜய், அரவிந்த் ஆகாஷ், வினோதினி வைத்யநாதன், சிவகுமார், கஜராஜ், ராஜேஷ், வின், வினோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். கேபிள் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்த வெப் சீரிஸிற்கு தீனா தேவராஜன் இசையமைத்துள்ளார். ‘தேசிய அளவில் முதல் முறையாக சமகால அரசியலையும், அதன் போக்கையும் மிகத் தீவிரமாய் பேசும் தொடராக அதிகாரம் இருக்கும்’ என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share
ALSO READ  "மோகன்தாஸ்" படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பல தடைகளை தாண்டி “மாநாடு” ஷூட்டிங் தொடக்கம்

Admin

நடிகை நிவேதா தாமஸுக்கு கொரோனா தொற்று !

News Editor

பழம்பெரும் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்…!

naveen santhakumar