சினிமா

காமத்தினை பேசுபொருளாக கொண்டு உருவாகும் முதல் அந்தாலஜி படம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் கொரோனா காலத்தில் பல்வேறு அந்தாலஜி  படங்கள் இயக்கப்பட்டு வெளியிடப்பட்டது.  அதில் இயக்குனர் வெற்றிமாறன், கௌதம் வாசுதேவ் மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்கரா ஆகிய நான்கு பேர் இயக்கத்தில் அந்தாலஜி படமாக பாவக்கதைகள்  உருவாகியிருந்தது. இந்த படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது.  அதனையடுத்து மக்கள் மத்தியில் அந்தாலஜி  படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியது.

அதனையடுத்து தற்போது திரையரங்கில் வெளியாகிய அந்தாலஜி படமான “குட்டி ஸ்டோரி” நல்ல வரவேற்பினை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்  ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ எனும் ஹிந்தி படத்தினைப் போன்று தமிழில் காமத்தினைப் பேசுபோருளாக கொண்டு உருவாகும் முதல் ஆந்தாலஜி திரைப்படம் ‘SSHHH’. பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐபி கார்த்திகேயன் இப்படத்தினை தயாரிப்பதோடு, படத்தின் நான்கு கதைகளில் ஒரு பகுதியினை இயக்குகிறார். மற்ற மூன்று கதைகளை பிருத்வி ஆதித்யா, வாலி மோகன் தாஸ், ஹரீஷ் GY ஆகியோர் இயக்குகின்றனர்.

இப்படத்தில் தமிழ் சினிமா பிரபலங்களான ஶ்ரீகாந்த், இனியா, சோனியா அகர்வால், ஐஷ்வர்யா தத்தா, க்ரிஷா க்ரூப், அறிமுக நடிகர் மாறன் மற்றும் மைம் கோபி நடித்துள்ளனர். எக்சலண்ட் பிக்சர் பாக்ஸ் நிறுவனம் சார்பில் விவேக் ரவிசந்திரன் மற்றும் டயானா பிக்சர்ஸ் சார்பில் திரு. சுரேஷ் நல்லுசாமி இப்படத்தினை இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் உலகளாவிய வெளியீடு குறித்த அறிவிப்பு மிகவிரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.


Share
ALSO READ  ரஜினி பற்றி பேச தொலைகாட்சிகள் பணம் தர வேண்டும்... பிரபல நடிகர் கிண்டல் !!!!!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரசியலில் குதிக்க போகும் பிரபல நடிகை?

Shanthi

கொஞ்சும் கிளி…கேத்ரின் தெரசாவின் அழகிய புகைப்படங்கள்

Admin

பாத்ரூமில் போட்டோஷூட் செய்த விஜய் பட நடிகை…..!!!!

Shobika