சினிமா

சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தம்  !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவரின்  நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சூரரைப் போற்று’. ஓடிடி தளத்தில் வெளியாகியது. அதனையடுத்து இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ‘சூர்யா 40’ எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளார். இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா 40 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் பலர் நடிக்கவுள்ளனர். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அண்மையில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சூர்யாவின் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ALSO READ  இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா தொற்று; மன நிம்மதியில் மருத்துவர்கள் !


இந்நிலையில் சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருவதால் இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளியானது “த்ரிஷ்யம் 2” ரீமேக்கின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

News Editor

“தளபதி 65″படம் குறித்து  ஒளிப்பதிவாளர் ட்வீட் !

News Editor

வைரலாகும் M.S.பாஸ்கர் அறிமுகமான முதல் படத்தின் புகைபடம்.. எந்த படம் தெரியுமா???

naveen santhakumar