சினிமா

சிகரெட், சரக்கு பாட்டில், தமிழ் ராக்கர்ஸ் … வைரலாகும் பிரேம்ஜியின் புகைப்படம்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பரணி ஜெயபால் இயக்கத்தில் பிரேம்ஜி அமரன் நடித்திருக்கும் தமிழ் ராக்கர்ஸ் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நடிகர், இசையமைப்பாளரான பிரேம்ஜி அமரன் பெரும்பாலும் தன் அண்ணன் வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஜஸ்வந்த் சூப்பர் சின்மாஸ் சார்பில் கே.பிச்சாண்டி தயாரிப்பில் பரணி ஜெயபால் இயக்கியுள்ள படம் ‘தமிழ் ராக்கர்ஸ்’. இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்ததோடு முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இப்படத்தில் பிரேம்ஜியுடன் எஸ்.பி.பி.சரண், விடிவி கணேஷ், இயக்குநர் சரவண சுப்பையா, நாஞ்சில் சம்பத், தேவதர்ஷினி, மீனாக்‌ஷி திக்‌ஷித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயராகி வரும் நிலையில், தமிழ் ராக்கர்ஸ் படத்தின் போஸ்டரை பிரேம்ஜி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

ALSO READ  'மாநாடு' படம் குறித்து இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் கருத்து! 

ஒரு கையில் சைக்கிள் செயின், மற்றொரு கையில் மது, வாயில் சிகரெட் என்று பயங்கரமாக போஸ் கொடுத்திருக்கிறார்.

ALSO READ  "தளபதி 65" படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே !

பிரேம்ஜியின் போஸை விட அந்த தமிழ் ராக்கர்ஸ் என்கிற பெயர் தான் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. எந்த படம் ரிலீஸானாலும் அதை சில மணிநேரத்தில் ஆன்லைனில் கசியவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

இந்த தமிழ் ராக்கர்ஸை அடக்க ஆளே இல்லையா என்று திரையுலகம் குமுறும் நிலையில் பிரேம்ஜி அமரனின் படத்திற்கு இப்படி ஒரு தலைப்பு வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் தமிழ் ராக்கர்ஸை பற்றியதா இல்லை பரபரப்புக்காக இருக்கட்டும் என்று வைத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் கசியவிடத் தான் போகிறது என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகை தமன்னா தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்தபோது, திடீரென சரிந்து விழுந்த வீடியோ…

naveen santhakumar

கே.ஜி.எப் 2 படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு 

News Editor

விவேக் குறித்து வீடியோ வெளியிட்ட பாலிவுட் நடிகை !

News Editor