சினிமா

ஊடகங்களில் வெளியாகும் செய்தி தவறானது; இயக்குநர் லிங்குசாமி

தமிழகத்தில் நேற்று முன்தினம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பல பிரபலங்கள் வாக்கு அளிக்கவில்லை என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டது. அந்த பட்டியலில் இயக்குநர் லிங்குசாமி பெயரும் இடம் பெற்று இருந்தது. இதை பார்த்து கோபமடைந்த இயக்குநர் லிங்குசாமி நான் வாக்களித்து விட்டேன் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ராஜமுந்திரியில் என் அடுத்த படத்திற்கான வேலைக்கு இடையில் என் வாக்கை செலுத்தவே சென்னைக்கு வந்து பதிவு செய்தேன்.சில ஊடகங்கள் நான் வாக்கு செலுத்தவில்லை என தவறான செய்திகளை வெளியிட்டுள்ளது. நான் எனது கடமையை செய்தது போல் நீங்களும் உங்கள் கடமையை சரியாக செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார். 

#Lingusamy #TamilThisai #TamilNadu #Cinema #Cinemanews #CineUpdate #Tamilnaduelection #Newschannel

Related posts

யாருமே எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு புரட்சி நடக்கும் என்று; பி.சி.ஸ்ரீராம் கருத்து..!

News Editor

ராஷ்மிகாவுக்கு நன்றி சொன்ன ரித்திக் ரோஷன்

Admin

வெளியாகியது மாஸ்டர் படத்தின் அப்டேட் ..!

News Editor