சினிமா

“தளபதி 65” படத்தின் கதாநாயகியை உறுதி செய்தது படக்குழு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் தளபதி 65 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தை தயாரிக்கவுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம், இதுகுறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ள படக்குழு, படத்திற்கான நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறது.

படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர், விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார். படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் படப்பிடிப்பை ஏப்ரல் மாத இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு.

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி நிலையில் படக்குழு இதனை உறுதி செய்யும் வகையில் ட்விட்டரில் படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தளபதி 65 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ALSO READ  முதன்முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் அனுஷ்கா…

#thalapathy #vijay #master #tamilmovie #thalapathy65 #nelson #sunpictures #poojahegde #vjay #cinema #cinemtrending #kollywood #cine #cineupdate #TamilThisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீண்டும் தொடங்குகிறது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு – இயக்குனர் சிவா அறிவிப்பு 

News Editor

ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் கார்த்தி !

News Editor

அதிக பார்வையாளர்களை கடந்து விஸ்வாசம் பட பாடல் சாதனை

Admin