சினிமா

‘தளபதி 65’ படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்ற விஜய்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 65” என பெயரிடப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில்  விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார்.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அபர்னா தாஸ், வி.டி.கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். அண்மையில் இப்படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில் படத்தின் படப்பிடிப்பு தேர்தல் முடிந்த பிறகே படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்பட்டது. 


இதனையடுத்து நேற்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்த முடிந்த நிலையில் தளபதி 65 படத்திற்காக நடிகர் விஜய் மற்றும் படக்குழு ஜார்ஜியா சென்றுள்ளனர். நடிகர் விஜய் ஜார்ஜியா செல்வதற்காக விமான நிலையம் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. படக்குழு 16 நாட்கள் ஜார்ஜியாவில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

#Yogibabu #thalapathy #vijay #master #tamilmovie #thalapathy65 #nelson #sunpictures #poojahegde #vjay #cinema #cinemtrending #kollywood #cine #cineupdate #TamilThisai

Related posts

இந்தியில் ரிலீஸாகும்  சூரரை போற்று; தேதியை அறிவித்த படக்குழு!

News Editor

சுல்தான் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor

“கே.ஜி.எஃப்” பிரபலங்களுடன் கைகோர்த்த விஷ்ணு விஷால் !

News Editor