சினிமா

நடிகர் விஜய்க்கு ஜார்ஜியாவில் உற்சாக வரவேற்பு !

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 65” என பெயரிடப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில்  விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார்.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அபர்னா தாஸ், வி.டி.கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். அண்மையில் இப்படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில் படத்தின் படப்பிடிப்பு தேர்தல் முடிந்த பிறகே படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்பட்டது. இதனையடுத்து  நடிகர் விஜய் கடந்த 6 ஆம் தேதி தனது வாக்கு செலுத்திவிட்டு ‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றார்.

இந்நிலையில், விஜய் ஜார்ஜியா சென்றடைந்த புகைப்படம் வெளியாகி இருக்கிறது. விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் விஜய்க்கு பூங்கொத்துகள் கொடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

#Yogibabu #thalapathy #vijay #master #tamilmovie #thalapathy65 #nelson #sunpictures #poojahegde #vjay #cinema #cinemtrending #kollywood #cine #cineupdate #TamilThisai

Related posts

ஜிவி பிரகாஷ் படத்தில் நடிகர் தனுஷ்..!

News Editor

அருண் விஜய் 33 படத்தில் நடிக்கும் ஜெயபாலன்..!

News Editor

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் இடம் பெற்றார் நடிகை சாய்பல்லவி.

naveen santhakumar