சினிமா

தளபதி 65 அப்டேட்; விஜயுடன் நடிப்பதை உறுதிசெய்த மற்றுமொரு நடிகை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 65” என பெயரிடப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடக்கவுள்ளது.

இதனையடுத்து தளபதி 65 படம் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். 

இப்படத்தில் மற்றுமொரு கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் இதனை உறுதி செய்துள்ளார்.

ALSO READ  கொரோனா குறித்து ஹிப்ஹாப் ஆதி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ...
Aparna Das

இது தொடர்பாக நடிகை அபர்ணா தாஸ் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், ‘தளபதி 65’ எனும் மிகப்பெரிய படத்தில் ஒரு அங்கமாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். நடிகை அபர்ணா தாஸ் மலையாளத்தில் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

#thalapathy #vijay #master #tamilmovie #thalapathy65 #nelson #sunpictures #poojahegde #vjay #cinema #cinemtrending #kollywood #cine #cineupdate #TamilThisai #AparnaDas #MalayalaActress


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வேகமெடுக்கும்  கொரோனா; படப்பிடிப்புகள் ரத்து !

News Editor

நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவன் கைது ..!

naveen santhakumar

தமிழக ஆளுநருக்கு விஜய் சேதுபதி வேண்டுகோள்:

naveen santhakumar