சினிமா

வைரலாகும் திரிஷாவின் மிஸ் சென்னை பட்டம் பெற்ற புகைப்படம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

21 ஆண்டுகளுக்கு முன் தான் மிஸ் சென்னை பட்டம் வாங்கிய புகைப்படம் ஒன்றினை நடிகை திரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது வரை முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை த்ரிஷா. ஜோடி, மௌனம் பேசியதே ஆகிய படங்களில் துணை நடிகையாக அறிமுகமாகி பின்னர் “மனசெல்லாம்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக கால் தடம் பதித்தவர் நடிகை திரிஷா.

அதனையடுத்து விஜய், அஜித்,கமல் என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.தற்போது 37 வயதாகும் நடிகை திரிஷா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ALSO READ  திருமண நாளில் வாழ்த்துக்களை பரிமாறி கொண்ட பிரிந்த தம்பதியர் :

இந்நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி தான் மிஸ் சென்னை பட்டத்தை வாங்கிய புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள த்ரிஷா, “எனது வாழ்க்கையை மாற்றிய மிக முக்கியமான நாள் இன்று” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளியாகியது கர்ணன் படத்தின் புதிய அப்டேட் !

News Editor

காதலருடன் போதைப்பொருள் பயன்படுத்திய நடிகை கைது :

Shobika

இலவசமாக ஸ்மார்ட்போன்கள் வழங்கிய சோனு சூட்..! குவியும் பாராட்டுக்கள்..! 

News Editor