சினிமா

‘மறக்கமுடியாத அந்த நாட்கள்’ விவேக் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். தனது 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் மக்களுக்கு தேவையான  மூடநம்பிக்கை, லஞ்சம், ஊழல் உள்ளிட்ட சமூக ரீதியான கருத்துக்களை தனது காமெடி மூலம் அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்தவர்.

இந்நிலையில் நடிகர் விவேக் நேற்று நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனையடுத்து அவருக்கு எக்மோர் கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகர் விவேக் இன்று காலை 4.35 மணியாளவில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இதனையடுத்து இவரின் இறப்பிற்கு திரைப் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகர் விவேக் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார், அதில்,  ”சின்ன கலைவாணர், சமூக சேவகர், நெருங்கிய நண்பர் விவேக் இறந்த செய்தி மிகுந்த வேதனையைத் தருகிறது. சிவாஜி படப்பிடிப்பில் விவேக்குடன் நடித்த ஒவ்வொரு நாளும் மறக்கமுடியாத நாட்கள். விவேக்கை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  "த்ரிஷ்யம் 2" படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு; மகிழ்ச்சியில் மோகன் லால்..!

#Corona #Coronavaccine #TamilThisai #Tamilcinema #Cinema #Cinemanews #Tamilnadu #Vivek #Kollywood #RIPviveksir #vairamuthu #Rajini #Superstar


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தனுஷ் நடித்த ‘அத்ரங்கி ரே’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor

விஜய் டிவி ‘டிடி’க்கு கால் முறிவு!! ரசிகர்கள் அதிர்ச்சி!!…

naveen santhakumar

அருண் விஜய் -ஹரி  கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்குகிறது.

News Editor