சினிமா

அப்பா வாழ்ந்த  காட்டில் பணப்புதையல் இருக்கிறது; வீரப்பன் மகள் விஜயலட்சுமி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் ராஜா இயக்கும் படத்தில் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு மாவீரன் பிள்ளை என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் மூலம் வீரப்பனின் மகள் சினிமா துறையில் அறிமுகமாவுள்ளார். 

இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் மாவீரன் பிள்ளை படக்குழுவினர் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் படத்தின் கதாநாயகியும், வீரப்பனின் மகளுமான விஜயலட்சுமி பேசுகையில்,”மாவீரன் பிள்ளை படமானது சாதியை சார்ந்த படமாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது .

ஆனால் இது முழுக்க முழுக்க சமூக அவலங்களை எடுத்துக் கூறும் படமாகவும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, மதுவிலக்கு, விவசாயிகளின் தற்போதைய போராட்டங்கள் முழுவதுமாக படமாக்கப்பட்டுள்ளது. அப்பாவை எனக்கு மிகவும் பிடித்ததால் மட்டுமே அவரது புகைப்படம் பயன்படுத்தப்படுவதாகவும் அவரின் வாழ்க்கை கதைக்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.

ALSO READ  "கோடியில் ஒருவன்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !


 இந்த படத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்யும் வழக்கறிஞராக எனது கதாபாத்திரம் அமைந்துள்ளது. நல்ல கதை கரு இருந்தால் அடுத்த படங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறினார்.

வீரப்பன் வாழ்ந்த காட்டில் பண புதையல் இருக்கிறதா என்ற கேள்விக்கு கண்டிப்பாக  இருக்கிறது  எனவும் அது அப்பாவுக்கும் அப்பாவின் நண்பர் கோவிந்தன் அவர்களுக்கு மட்டுமே தெரியும் .ஆனால் அவர்கள் இருவரும் இப்போது உயிரோடு இல்லை. ஆனால் நிச்சயம்  பணப்புதையல் இருக்கிறது எனவும் கூறினார். மேலும் இம்மாத இறுதிக்குள் படம் திரைக்கு வரும் என்றார்.

ALSO READ  "விவசாயிகள் ஏர்முனை கடவுள்"; இணையத்தில் வைரலாகும் ஜி.வி பிரகாஷ் ட்வீட் !

#Veerappan #TamilThisai #Tamilcinema #Cinema #CineUpdate #Tamilnadu #Vijayalakshmi #Kollywood


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கூகுள் குட்டப்பா- பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு சூர்யா உதவி

naveen santhakumar

ஹிந்தி உலகில் தடம் பதிக்க போகும் மாஸ்டர் படம்….

Shobika

அப்போ அது fake வீடியோவா.. அஜித் ரசிகர்கள் குழப்பம்…..

naveen santhakumar