சினிமா

மூத்த கன்னட நடிகர் சத்யஜித் மறைவு – திரையுலகினர் இரங்கல்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெங்களூரு,

கன்னட நடிகர் சத்யஜித் (72) பெங்களூருவில் உள்ள பௌரிங் அண்ட் லேடி கர்சண் அரசு மருத்துவமனையில் உடல்நலக்கோளாறு காரணமாக காலமானார்.

Big News : कन्नड़ एक्टर सत्यजीत का निधन, लंबे समय से थे बीमार | Kannada  actor satyajith passes away | TV9 Bharatvarsh

அவர் 2016-ம் ஆண்டு அவர் நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். நீண்ட காலமாகப் பல உடல்நலப் பிரச்சினைகளுடன் போராடி வந்த சத்யஜித்,  கேங்க்ரீன் காரணமாகக் கடந்த காலங்களில் அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

அவருடைய இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 650க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  'ராஜவம்சம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சையத் நிசாமுதின் என்னும் இயற்பெயர் கொண்ட சத்யஜித் 1983-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘அல்லா நீனே ஈஷ்வரா நீனே’ என்னும் திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அவருடைய மூத்த மகன் ஆகாஷ் ஜித் கன்னடத்தில் நடிகராக உள்ளார், மகள் ஒரு பெண் விமானியாக உள்ளார்.

ALSO READ  குலை நடுங்க வைக்கும் கர்ணன்; டீசர் வெளியிட்ட படக்குழு !

ஆப்தமித்ரா, சிவா மெச்சிடா கண்ணப்பா, புத்நஞ்சா, சைத்ரதா பிரேமாஞ்சலி உள்ளிட்ட பல படங்களில்
முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும், வில்லன் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து புகழ் பெற்றவர்.

கன்னட திரையுலகினர் பலர் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான சுமலதா அம்பரீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஏ.ஆர் ரகுமான் பிறந்தநாள் பரிசாக’கோப்ரா’ படக்குழு கொடுத்த அப்டேட் !

News Editor

விஜய்யுடன் போட்டி போடும் சிம்பு..! 

News Editor

“விரைக தமிழா! ஆஸ்கர் அதிக தொலைவில்லை; வைரமுத்து ட்வீட் !

News Editor