சினிமா

‘ஒன்றரை வருட உழைப்பு லீக் காட்சிகளை சேர் செய்யவேண்டாம்’ லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து “மாஸ்டர்” படத்தினை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். . படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் அவரை  முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, மகேந்திரன், கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.  


அண்மையில் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. அதனையடுத்து படக்குழு மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. அதனையடுத்து மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்ட நிலையில், 400 சட்ட விரோத இணைய தளங்கள் மற்றும் 29 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக  வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேர காட்சிகள் சிறிது சிறிதாக இணையத்தில் வெளியாகி உள்ளதால் காட்சிகளை நீக்கும் பணியில் படக்குழுவினர் தீவிரம் காட்டிவருகின்றனர்.

ALSO READ  தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பி.இ படிக்கச் ஏ.ஐ.சி.டி.இ அனுமதி !

இதுதொடர்பாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டரில், ““மாஸ்டர் படத்தை உங்கள் பார்வைக்கு கொண்டு வர ஒன்றரை வருடமாக போராடியிருக்கிறோம். இந்தப் படத்தை தியேட்டரில் நிச்சயம் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்தப் படம் தொடர்பான லீக் காட்சிகள் கண்ணில் பட்டால் தயவு செய்து ஷேர் செய்ய வேண்டாம். எல்லோருக்கும் நன்றி. இன்னும் ஒருநாள் தான் இருக்கு. இது உங்களுடைய மாஸ்டர்” என்று குறிப்பிட்டுள்ளார். 

#thalapathy #master #masterpongal #msterrelease #masterleaked #tamilthisai #tamilcinema


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆன்லைனில் மது ஆர்டர் செய்த நடிகையிடம் ரூ.35 ஆயிரம் மோசடி

Admin

வெப் தொடர் சர்ச்சை : மீண்டும் இணைய தொடரில் நடிக்கும் பிரபல நடிகை…!

naveen santhakumar

வலிமை ரிலீஸ் – தள்ளிப்போனதற்கான காரணம் என்ன?

News Editor