சினிமா

விஜய் பட நடிகைக்கு கொரோனா தொற்று 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

அண்மையில் நடிகர் மாதவன், அமீர்கான், நடிகை வைபவி உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது நடிகை கவுரி கிஷனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 


இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறேன். என் மருத்துவரின் அறிவுரைபடி சிகிச்சை பெற்று படிப்படியாக குணமாகி வருகிறேன். கடந்த ஒரு வாரம் என்னை சந்தித்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ  வீதியின் விதி மாற்றுவோம்!


இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “96” படத்தில் த்ரிஷாவின் இளமைப்பருவ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதனையடுத்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

#Bollywood #madhavan #Mumbai #Maharashtra #Cinema #Cinenews #CinemaTrending #tamilThisai CoronaPositive #covidTest #CoronaVirus #GouriGkishan #Master #vijay #Vijaysethupathy


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீண்டும் ஒரு மனித உறுப்புக்கடத்தல் கதை – வெளியானது டாக்டர் டாக்டர்

News Editor

“தலைவி” படத்தின் டிரைலர் குறித்து அப்டேட் வெளியீடு !

News Editor

பிரபாஸ் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்…. 

naveen santhakumar