சினிமா

‘விஜய்’பட காமெடி நடிகர் ‘பெஞ்சமின்’ மருத்துவ உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் பெஞ்சமின்  “எனக்கு நெஞ்சு வலி மருத்துவ உதவி செய்யுங்கள்” என்று உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.


பெஞ்சமின் தமிழில் குணச்சித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் திருப்பாச்சி, திருப்பதி, அருள், வசூல் ராஜா எம்பிபிஎஸ், வேங்கை போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். நடிகர் பெஞ்சமின் ‘ஆட்டோகிராப்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான் 54 வயதாககும் இவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் மருத்துவம் செய்ய போதிய வசதி இல்லை என்றும் உருக்கமான வீடியோ ஒன்றினை பெஞ்சமின் வெளியிட்டுள்ளார்.

ALSO READ  கோவில் உண்டியலில் தொடர் திருட்டு; போலீசார் வலைவீச்சு !


அதில்  “எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துள்ளது அதற்காக சேலத்தில் உள்ள மருத்துவமணையில் சிகிச்சை எடுத்துதேன். இங்கு அறுவை சிகிக்சை செய்யும் அளவிற்கு என்னிடம் வசதி இல்லை. ஆகையால் பெங்களூரில் உள்ள நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு எவ்வளவு செலவாகும் என்று எனக்கு தெரியவில்லை. நண்பர்கள் உங்களுக்கு தெரிந்த மருத்துவ நண்பர்களிடம் குறி மருத்துவ உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்”, என்று உதவி கேட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளியாகியது தனுஷ் செல்வராகவன் புதிய படத்தின் அப்டேட் !

News Editor

‘இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடும்’;விவேக் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் ! 

News Editor

வெளியாகியது “RRR” படத்தின் அடுத்த அப்டேட் !

News Editor