சினிமா

தளபதி 64 ஷூட்டிங்கில் இணைந்த விஜய் சேதுபதி..கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் தீபாவளிக்கு பிகில் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் 2019 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த திரைப்பட பட்டியலில் முதலிடத்தைப் பிகில் திரைப்படம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

பிகில் திரைப்படத்தை தொடர்ந்துஃ தற்போது தற்போது தளபதி 64 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் இணைந்துள்ளார்.மேலும் இந்த படத்தில் 96 கௌரி, ரம்யா, ஆண்ட்ரியா, சாந்தனு என பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளனர். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே டெல்லியில் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில், ஷிமோகா என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பிற்காக விஜய் அங்கிருக்கும் ஓட்டலில் தங்கியுள்ளார்.அதனால் தினமும் விஜய்யை காண ரசிகர்கள் கூட்டம் வந்த வண்ணமாகவே இருக்கிறது.

ALSO READ  விரைவில் அனைவரையும் மிரட்ட வருகிறது அரண்மனை-3......

இந்நிலையில் படப்பிடிப்பை மேலும் உற்சாகம் ஆக்கும் வகையில், தற்போது தளபதி64 ஷூட்டிங்கில் கலந்து கொள்ள விஜய் சேதுபதி கர்நாடகா சென்றுள்ளார். அங்கு விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவருக்குமிடையேயான காட்சிகள் எடுக்கப்பட உள்ளன என்று கூறப்படுகின்றது.

https://twitter.com/i/status/1210255920187359232

விஜய் சேதுபதியை கர்நாடகாவிற்கு வரவேற்கும் விதமாக அவரின் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகர் 

News Editor

‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் ட்ரைலர் வெளியீடு !

News Editor

ஜகமே தந்திரம் படத்தின் புதிய அப்டேட் வெளியீடு !

News Editor