சினிமா

விஜயராஜ் டூ விஜயகாந்த்- இப்போதும் எப்போதும் திரையுலகின் கேப்டன் விஜயகாந்த் – HBD விஜயகாந்த்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

விஜயகாந்த் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள சின்ன கிராமத்தில் 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிறந்தார் விஜயராஜ்.

பள்ளிப்படிப்பை 10 ஆம் வகுப்புடன் நிறுத்திவிட்டு, அப்பாவின் அரிசி ஆலையை கவனிக்கத் தொடங்கினார். ஆனால் விஜயராஜ்க்கு, மனம் முழுவதும் சினிமாவே இருந்தது. இதனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் மதுரையில் இருந்து 1978 இல் சென்னைக்கு வந்த விஜயராஜ்.

திரைத்துறையில் இன்று சாதித்துள்ள கதாநாயகர்களில் 90 சதவிகித கதாநாயகர்கள் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே சாதித்துள்ளனர். அந்த 90 சதவிகித நாயகர்களில் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த்தும் ஒருவர்.

இயக்குநர் எம்.ஏ.காஜாவின் ‘இனிக்கும் இளமை’ படத்தின் மூலம் விஜயகாந்த் ஆக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இயக்குநர் எம்.ஏ.காஜா விஜயராஜ் என்ற பெயரை விஜயகாந்த் என்று மாற்றினார்.

Captain Vijayakanth Returns Back With Tamizhan Endru Sol! | NETTV4U

ஆனால் முதல் படம் அவருக்கு இனிமையை தரவில்லை. அடுத்தடுத்த படங்களின் நிலையும் இதேதான். ஆனால், விஜயகாந்த் சோர்ந்துப்போகவில்லை. தொடர்ந்து முயன்றுக்கொண்டே இருந்தார்.

பின்னர் கே.விஜயன் இயக்கத்தில் சலீல் சவுத்ரி இசையில் விஜயகாந்த் நடித்த “தூரத்து இடி முழக்கம்”, பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின்பு, எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் நடித்த “சட்டம் ஒரு இருட்டறை” பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து, பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

image

இதன் பின்பு, இராம.நாராயணன் இயக்கிய “சிவப்பு மல்லி”யும் ஹிட். அப்போதுதான் விஜயகாந்தின் திரையுலக கிராஃப் ஏற ஆரம்பித்தது. . “அம்மன் கோயில் கிழக்காலே”, “வைதேகி காத்திருந்தாள்” படங்கள் தமிழகமெங்கும் விஜயகாந்தை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்தது.

1980-கள் ரஜினி, கமல் என திரையுலகத்தை கோலோச்சிய காலம். இவர்களின் கால்ஷீட் கிடைக்காத சிறு தயாரிப்பாளர்கள் அடுத்து நாடியது விஜயகாந்தைதான். வெற்றித் தோல்வி என சரிபாதியாகவே அவர் வாழ்க்கை சென்றுக்கொண்டு இருந்தது. ஆனால், மணிவண்ணன் தனது “நூறாவது நாள்” படத்தின் மூலம் விஜயகாந்துக்கு மீண்டும் ஒரு பிரேக் கொடுத்தார்.

ALSO READ  விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி:
Vijayakanth albums , Vijayakanth music albums MP3 download

ஹீரோ என்று மட்டுமல்லாமல், தன்னுடைய கேரக்டர் சின்னதாக இருந்தாலும், வலுவாக இருக்க வேண்டும் என்று நினைப்பார் விஜயகாந்த். அப்படி அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். அப்படித்தான் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் எடுத்த “ஊமை விழிகள்” படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்திருப்பார். அதன் இயக்குநரான அரவிந்த் ராஜ் அடுத்தடுத்து இயக்கிய உழவன் மகன், செந்தூரப் பூவே ஆகியவையும் மாபெரும் வெற்றி.

1990-களுக்குப் பிறகு விஜயகாந்த் தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத ஹீரோவானார். இந்தக் காலக்கடத்தில்தான் புரட்சி்க் கலைஞர் விஜயகாந்த் என அழைக்கப்பட்டார். ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வந்த “புலன் விசாரணை”யும், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளியான “சின்னக் கவுண்டர்” விஜயகாந்துக்கு பெயரும் புகழும் கொடுத்தது. புலன் விசாரணை படத்தின் மேக்கிங் அப்போது பெரிதும் பேசப்பட்டது.

Vijayakanth's Captain Prabhakaran – How the actor beat Rajinikanth and  Kamal Haasan - Vijayakanth- Captain Prabhakaran- RK Selvamani- Rajinikanth-  Kamal Haasan- Captain- Illayaraja | Thandoratimes.com |

ரஜினியின் 100-வது படம் “ராகவேந்திரா”, கமலின் 100-வது படம் “ராஜ பார்வை” என பெரிய நடிகர்களின் 100-வது படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் தமிழ் கதாநாயகர்களுக்கும் 100-வது படத்துக்கும் ராசியே இல்லை என்ற மூடநம்பிக்கையை கேப்டன் பிரபாகரன் மூலம் உடைத்தவர் விஜயகாந்த்.

ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், லியாகாத் அலிகான் வசனங்களில் விஜயகாந்தின் 100 ஆவது படமான “கேப்டன் பிரபாகரன்” தியேட்டர்களில் 200 நாள் ஓடி சாதனைப் படைத்தது. இந்தப் படத்திற்கு பின்பே, ’கேப்டன்’ என்ற பெயர் விஜயகாந்தை தொற்றிக்கொண்டது.

அதிரடியான போலீஸ் வேடம் என்றால் விஜயகாந்த் என்றானது “மாநகர காவல்”, “சேதுபதி ஐ.பி.எஸ்., “ஹானஸ்ட் ராஜ்” ஆகியவை பட்டையை கிளப்பியது. அதேசமயம் முற்றிலும் மாறுபட்ட அழுத்தமான அமைதியான போலீஸாக நடித்தப்படம் மணிரத்னத்தின் கதை, திரைக்கதையில், கே.சுபாஷ் இயக்கத்தில் வெளியான “சத்ரியன்”. இப்போதும் விஜயகாந்த்தின் கிளாஸிக்கில் சத்ரியனுக்கு தனி இடம் உண்டு. இதன் பின்பு ’ரமணா’ வரை விஜயகாந்த் தொட்டதெல்லாம் ஹிட்.

ALSO READ  சென்னை திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்: தொண்டர்கள் உற்சாகம்!

1999 முதல் 2004 வரை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த், நடிகர் சங்க கடனை அடைத்தார். 2001 இல் சிறந்த இந்தியக் குடிமகன் விருதை விஜயகாந்துக்கு ஐ.நா. மனித உரிமைக் கமிஷனின் அப்போதைய தலைவர் பி.என்.பகவதி டெல்லியில் வழங்கினார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பாகக் கூட ஒவ்வொரு வார இறுதிநாட்களிலும் தன் வீடு தேடி உதவிக் கேட்டு வரும் ஏழை மக்களுக்கு உதவியவர். தியேட்டர் அதிபர்கள் இப்போதும் கொண்டாடும் வசூல் சக்கரவர்த்தி விஜயகாந்த்.

இப்போதும், தமிழகத்தில் ஏதோ கிராமத்தில் விஜயகாந்தின் பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டால் வசூல் கொடுக்கும் என்பது தியேட்டர் அதிபர்களின் நம்பிக்கை. விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மீது மிகுந்த மரியாதை கொண்டவர், அதன் காரணமாகவே தனது மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயர் சூட்டினார்.

அதேபோல மிகச் சிறந்த தேசப் பற்றுக்கொண்டவர். இது தனது படங்களின் வசனங்கள் மூலம் எதிரொலித்தது. இப்போது உடலும், குரலும் தளர்ந்து இருந்தாலும் அவர் மீண்டும் தன் கர்ஜனை குரலில் சினிமாவில் பேச வேண்டும் என்பது அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு முன்னதாகவே கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருந்த போதே அரசியல் களம் கண்டு மிகப்பெரிய வெற்றியும் கண்டவர் விஜயகாந்த் தான். எதிர்கட்சி தலைவர் அந்தஸ்த்துக்கே உயர்ந்த அவர் திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக மீம் கிரியேட்டர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகினார்.

ஆனால், இளைஞர்கள் முன்பு போல இல்லை. விஜயகாந்த் செய்த சாதனைகளும் அவர் செய்த உதவிகளையும் அறிந்து கொண்டு அவரது பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

வாழ்த்துகள் கேப்டன், மீண்டு வாருங்கள் வெள்ளித்திரைக்கு. சத்ரியன் படத்தின் வசனமாக சொல்ல வேண்டும் என்றால் “வரனும் ! பழைய பன்னீர்செல்வமா திரும்ப வரணும்”.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திரௌபதி படத்தின் மூன்று நாட்கள் கலக்‌ஷன் என்ன தெரியுமா.!!!

naveen santhakumar

கணவருடன் ஹோலி கொண்டாடிய காஜல் !

News Editor

ரைசா யார லவ் பண்றாங்கன்னு தெரியலையே.. குழம்பிப்போன ஜிவி பிரகாஷ்

Admin