சினிமா

திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா ஜோடி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனையடுத்து, நேற்று இன்று நாளை, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம், முண்டாசுப்பட்டி போன்ற பல வென்றி படங்களில் நடித்திருக்கிறார். 


கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் கே.நடராஜன் மகள் ரஞ்சினியை விஷ்ணு விஷால் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்தார். அதனையடுத்து இந்திய பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக நடிகர் விஷ்ணு விஷால் கூறினார். சென்றாண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அண்மையில் நடிகர் விஷ்ணு விஷால் திருமண நாள் குறித்து அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளதாக கூறினார். 


இந்நிலையில்விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டாவின் திருமணம் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான அழைப்பிதழை நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ  லண்டனில் இருந்து இந்திய வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று..!

#cinema #Tamilmovie #TamilThisai #Kollywoodnews #Cinemaupdate #Cinemaupdate #Tamilmovie #tamilcinema #vishnuvishal #JwalaGutta

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சில்லுக்கருப்பட்டி பட இயக்குனர் பயிற்சி செய்யும்போது தவறி விழுந்து மரணம் :

naveen santhakumar

ஒரேயொரு ட்வீட் தான்…மகிழ்ச்சியான சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

Admin

அஜித் காஞ்சிபுரம் போலீசார் உடன் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரல்

Admin