சினிமா

கீர்த்தி சுரேசுக்கு பிடித்த நடிகர் யார் ???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் நம்பர் 1 நடிகையாக இருந்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

Keerthy Suresh (Actress) Wiki, Height, Weight, Age, Boyfriend, Biography &  More - Stars Biog

மேலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடனும் ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், தன்னுடன் நடித்த நடிகர்களின் பிடித்த குணங்கள் பற்றி கீர்த்தி சுரேஷ் கூறியதாவது:-

ALSO READ  இப்படி செய்யும் இயக்குனர்கள் முன்னேறவே முடியாது: பிரபல இயக்குனர் பேச்சு

“நான் பள்ளியில் படித்த நாட்களிலேயே சூர்யாவுக்கு பெரிய ரசிகை. எனது அம்மா சூர்யாவின் அப்பா சிவகுமாருடன் சில படங்களில் நடித்து இருக்கிறார். எனது அம்மாவிடம் சூர்யாவுடன் ஒரு நாள் நடிப்பேன் என்று சவால்விட்டேன். அது நிஜமானது.

சூர்யா படப்பிடிப்பு அரங்கில் அவருக்குத் தொடர்பு உள்ள காட்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துவார். ஏதாவது சந்தேகம் இருந்து நாம் கேட்டால் மட்டும்தான் யோசனை சொல்வார். சக நடிகைகளை உற்சாகப்படுத்துவதில் முன்னணியில் இருப்பார். ஆனால் யார் விஷயத்திலும் மூக்கை நுழைக்கமாட்டார்.

ALSO READ  நண்பரை கைப்பிடித்த "பூவே பூச்சூடவா" நடிகை…..

நடிகையர் திலகம் படத்தில் துல்கர் சல்மான் நடிப்பை பார்த்து அசந்தேன். ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்தார். தெலுங்கில் நானியை யதார்த்த நடிகர் என்பார்கள் நிஜமாகவே அவரது நடிப்பு சகஜமாக இருக்கும். கஷ்டமான காட்சிகளையும் சுலபமாக நடிப்பதை பார்த்து வியந்து இருக்கிறேன்”. இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிக பார்வையாளர்களை கடந்து விஸ்வாசம் பட பாடல் சாதனை

Admin

நடிகை தமன்னா தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்தபோது, திடீரென சரிந்து விழுந்த வீடியோ…

naveen santhakumar

தென்னிந்தியாவை அதிர செய்த சூர்யா ரசிகர்கள்…!

naveen santhakumar