இந்தியா

கொரோனாவால் உயிரிழந்த மகனின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

போபால்:

 மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ராம் விஷால் குஷ்வாகா இவருக்கு 22 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட, இவரது மகன் மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி ராம் விஷாலின் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் ,இவரது நிலைப்பற்றி குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகம் தகவல் எதுவும் கூறவில்லை .பலமுறை இவரது தந்தை போராடியும் அவர்களிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை. 

கடந்த 9ஆம் தேதி, திடீரென்று சிகிச்சை பலனின்றி அவரது மகன் இறந்துவிட்டதாக கூறி ,மருத்துவ நிர்வாகம் சடலத்தை அளித்தது.

ALSO READ  மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் கனிமொழி சோமு, ராஜேஸ்குமார் மூவரும் போட்டியின்றி தேர்வு

இறுதியில் சடலத்தை பார்த்த பொழுது அதில் அவரது மகன் சடலம் இல்லை, அதற்கு பதிலாக 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் உடல் அந்த பையில் இருந்தது. 

 இதுகுறித்து மருத்துவ நிர்வாகத்திடம் விசாரித்தபோது உள்ளாட்சி ஊழியர்கள் தவறுதலாக ராம் விஷாலின் மகன் உடலை எரித்து விட்டதாக நிர்வாகிகள் பதிலளித்தனர். 

ALSO READ  இளம்பெண்ணின் செயல் ; தீயாக பரவும் வீடியோ - விளக்கம் கேட்டு காவல்துறை நோட்டீஸ்

இதனால் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனை தொடர்ந்து மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர் ராகேஷ் படேல் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் .மகனின் உடலை கடைசியாக பார்க்க முடியவில்லை  என்பது மட்டுமல்லாமல் ஆஸ்தியும் கிடைக்கவில்லையே ,என்ற சோகத்தில் அவரது குடும்பத்தினரும் ,அப்பகுதி மக்களும் வருத்தத்தில்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட துணை குடியரசு தலைவர் !

News Editor

கொரோனா மையங்களாக மாறிய கல்லாரிகளை……மீண்டும் கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு:

naveen santhakumar

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..

Shanthi