இந்தியா சுற்றுலா

கொல்கத்தாவை விட்டு புலம்பெயர்ந்த யூதர்கள்-காரணம் என்ன?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொல்கத்தாவின் யூதர்கள்.

சுபா தாஸ் மாலிக்கின் “Dwelling in travelling” இந்த டாக்குமெண்டரி ஆனது நாளை மும்பை சர்வதேச திரைப்பட திருவிழாவில் திரையிடப்படுகிறது.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் கொல்கத்தா வந்த யூத மக்கள் குறித்து கூறுகிறது இந்த டாக்குமென்டரி.

சுபா தாஸ் மாலிக்.

யூதர்கள் பலகாலமாக பல்வேறு காரணங்களால் பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். வரலாறு தோறும் புலர்பெயர்ந்த இனம் என்றால் யூதர்களே ஆவர்.

பழைய பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக இருந்த கொல்கத்தாவில் பல்வேறு இன மக்களும் வாழ்ந்து வந்தனர். அவர்களில் யூதர்களும் அடங்குவர். இன்று நாம் காணும் கொல்கத்தாவின் சில முக்கிய அடையாளங்கள் பிரிட்டிஷாரால் ஏற்படுத்தப்பட்டவை அல்ல. அவை யூதர்களின் பங்களிப்பால் உருவானவை.

கொல்கத்தாவில் யூதர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வந்தனர். 1762 ஆம் ஆண்டு சிரியாவில் பிறந்த ஷாலோன் ஆஹாரன் ஒபாடியா கோஹன் 1792 ஆம் ஆண்டு சூரத் நகரத்திற்கு வணிக நோக்கத்திற்காக வந்தவர். பின்னர் 1798 ஆம் ஆண்டு கொல்கத்தாவிற்கு வந்தார். அவரைத் தொடர்ந்து பெருமளவில் யூத குடியேற்றம் கொல்கத்தாவில ஏற்பட்டது. பெரும்பாலான யூதர்கள் வர்த்தக நோக்கத்திற்காக வந்தனர்.

ALSO READ  ரேசன் கடையில் சமையல் சிலிண்டர் - மத்திய அரசின் திட்டம்!
ஷாலோன் ஆஹாரன் ஒபாடியா கோஹன்

யூதர்கள் இந்தியாவிற்கு வருவது முதல் முறை அல்ல.
அதற்கு முன்பே ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளிலேயே மலபார் கடற்கரையில் இறங்கியுள்ளனர்.

கொல்கத்தா நகரில் சினாகாக்குகள் (Synagogue) எனப்படும் யூத வழிபாட்டுத்தலங்கள் ஐந்து உள்ளன.

நர்கேல்டங்காவில் யூத கல்லறை ஒன்று உள்ளது. 1812 ஆம் ஆண்டு இறந்த மோசஸ் ட பஸ் (Moses De Pus) என்பவர் இங்கு அடக்கம் செய்யப்பட்ட முதல் நபர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

நர்கேல்டங்காவில் யூத கல்லைறகள்.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது கொல்கத்தா நகரில் 5000 முதல் 6000 யூதர்கள் வசித்து உள்ளனர். இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு யூதர்கள் பெரும்பாலோனோர் தங்களுக்கென்று அமைக்கப்பட்ட தனி தேசமான இஸ்ரேலுக்கு பயணப்பட்டனர். ஏனெனில் அதே காலகட்டத்தில் இந்தியாவும் சுதந்திரம் அடைந்தது. இதனால் எங்கே தங்களது சொத்துக்கள் அனைத்தும் தேசியமயமாக்கப் படுமோ என்று அச்சப்பட்ட யூதர்கள் உடனடியாக அவற்றை விற்றுவிட்டு இஸ்ரேல் தேசத்திற்கு சென்றனர்.

அன்றைய கொல்கத்தாவில் மூன்றுவிதமான பகுதிகள் இருந்தது. பிளாக் ஏரியா (Black Area) எனப்பட்ட இந்தியர்கள் வசித்த பகுதி. ஒயிட் ஏரியா (White Area) என்பது ஆங்கிலேயர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் வசித்த பகுதி. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட கிரே ஏரியா (Grey Area) என்பது யூதர்கள், அர்மீனியர்கள் மற்றும் பார்சிகள் வசித்த பகுதியாகும்.

ALSO READ  ஒரே நாளில் 89 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு !
ஒரு யூத குடும்பத்தின் பழைய புகைப்படம்.

கொல்கத்தாவில் கட்டப்பட்ட முதல் சினோ காக் நேவே ஷாலோமா சினோகாக் ஆகும். இது 1731 ஆம் ஆண்டு ஷாலோம் கோஹன் ஆல் கட்டப்பட்டது. இது 1910 ஆம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

நேவே ஷாலோமா சினோகாக்.

1856 ஆம் ஆண்டில் பேத் எல் சினோகாக் (Beth El Synagogue), 1884 ல் மேகன் டேவிட் சினோகாக் (Magen David Synagogue), 1897ல் மேகன் அபோத் சினோகாக் (Magen Aboth Synagogue) கடைசியாக 1933 ஆண்டில் ஷேர் ரஸூன் சினோகாக்கும் (Shaare Rasoon Synagogue) கட்டப்பட்டது.

கொல்கத்தாவில் யூதர்களுக்கு என மூன்று பள்ளிகள் உள்ளன.

பேத் எல் சினோகாக்.
மேகன் டேவிட் சினோகாக்.
மேகன் அபோத் சினோகாக்.

பெரும்பாலான யூதர்கள் இந்தியாவை விட்டு சென்று விட்டாலும் அவர்கள் விட்டுச் சென்ற கலை அடையாளங்கள் அவர்களை நினைவு படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு அரசு அலுவலகங்களை மாற்றி எடியூரப்பா உத்தரவுக்கு… எதிர்க்கட்சிகள் வரவேற்பு..

naveen santhakumar

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரிணமூல் எம்.எல்.ஏ. மரணம்…

naveen santhakumar

ஜி.எஸ்.எல்.வி. எப்.10 ராக்கெட் தனது இலக்கை எட்டவில்லை

News Editor