இந்தியா

சர்தார் படேல் ஒற்றுமை விருது 2020 – மத்திய அரசு அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மறைந்த முந்நாள் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் பெயரிலான நாட்டின் உயர்ந்த குடிமை விருது ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி அறிவித்தார். உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு இணையாக இந்த விருது கருதப்படும்.

நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாடுபடுவோர்க்கு படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31 இவ்விருது வழங்கப்பட உள்ளது.

இதற்கான நாமினேஷன் வரும் ஏப்ரல் 30 வரை உள்ளது. அக்டோபர் 31ஐ தேசிய ஒற்றுமை தினமாகவும் மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடதக்கது.

ALSO READ  தாகத்தால் 5 வயது சிறுமி உயிரிழப்பு…!

இந்நிலையில் நாட்டின் மிக உயரிய சிவில் விருதான சர்தார் படேல் ஒற்றுமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2020-ம் ஆண்டிற்கான நாட்டின் மிக உயரிய சிவில் விருதான சர்தார் படேல் ஒற்றுமை விருதுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பங்களுக்கான கடைசி நாள் ஏப்ரல் 20-ம் தேதி ஆகும்.

https://nationalunityawards.mha.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

ALSO READ  நவம்பர் மாதத்தில் 17 நாட்கள் விடுமுறை: முழு விவரம்!

தகுதி

மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம், வயது அல்லது தொழில் மற்றும் எந்த நிறுவனம் / அமைப்பு என்ற வேறுபாடு இல்லாமல் இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் விருதுக்கு தகுதியுடையவர். தனிநபர்கள் / நிறுவனங்கள் / நிறுவனங்கள் மட்டுமே இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அரசு அறிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சொகுசு கப்பலில் நடந்த போதை விருந்து; நடிகர் ஷாருக்கான் மகன் கைது..!

Admin

Ставки На Спорт В Бк 1win Спортивные Ставки Онлайн В Украин

Shobika

கவின்கேர் நிறுவனம் இண்டிகா விற்பனையை அதிகரிக்க பாலிவுட் நக்ஷத்திரங்களுடன் புதிய ஒப்பந்தம்

Admin