இந்தியா விளையாட்டு

தோனி இடம் அவருக்குத் தான் : உண்மையைச் சொன்ன பிரபல வீரர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தாங்கள் பயணிக்கும் பஸ்ஸில் தோனியின் இடத்தில் யாரும் அமர்வது இல்லை என சுழல் பந்துவீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நாளை மூன்றாவது டி20 போட்டியில் விளையாட உள்ளது.

இதற்காக ஹாமில்டன் நகருக்கு பஸ்ஸில் பயணம் செய்த போது, சுழல் பந்துவீச்சாளர் சாஹல் சக வீரர்களுடன் ஜாலியாக உரையாடுவது போன்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

ALSO READ  மத்திய பிரதேசத்தில் சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்- 3 பேர் பலி

அந்த வீடியோவின் இறுதியில் பஸ்சின் கடைசி இருக்கை அருகே அமர்ந்து, “இதுதான் லெஜெண்ட் தோனி அமர்ந்திருக்கும் இருக்கை எனவும் தற்போது அதில் யாரும் அமர்வது இல்லை” எனவும் கூறியுள்ளார்.

மேலும் நாங்கள் அவரை மிகவும் இழந்துள்ளோம் என அந்த வீடியோவில் தெரிவித்து இருக்கிறார். உலக கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியில் விளையாட தோனியின் பெயர் இந்த ஆண்டுக்கான ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம் !

News Editor

கர்ப்பிணித் தாயை தூக்கிச்சென்ற 100 ராணுவ வீரர்கள்

Admin

பிரதமர் மோடி திறந்து வைக்கும் உலகின் நீளமான சுரங்கப்பாதை:

naveen santhakumar