இந்தியா தொழில்நுட்பம்

10 விநாடி வீடியோ அனுப்புங்க : ஜியோவின் பரிசை வெல்லுங்க

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

snapchat செயலியில் 10 விநாடி வீடியோ பதிவிட்டால் இலவச ரீசார்ஜ் வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

சமூகவலைத்தளங்களில் ஒன்றான snapchat-ம் டெல்கோ நிறுவனமும் இணைந்து snapchat சிறப்பு லென்ஸை உருவாக்கியுள்ளது.

இதனை முன்னிட்டு ‘Jio Got Talent’ என்ற பெயரில் வீடியோ போட்டி ஒன்றை கடந்த 26ம் தேதி அறிமுகப்படுத்தியது.

அதன்படி snapchat செயலி பயன்பாட்டாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து நேரத்தை செலவழிப்பதை கொண்டாடும் வகையில் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் ‘எங்கள் கதை’ என்ற தலைப்பில் snapchat செயலியில் உள்ள லென்சை பயன்படுத்தி அதில் உள்ள சிறப்பம்சங்களை உபயோகித்து 10 விநாடி வீடியோ ஒன்றை பதிவு செய்ய வேண்டும்.

ALSO READ  நேபாள பிரதமருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதா ??- காங்கிரஸ் கடும் தாக்கு... 

பின் பதிவு செய்த அந்த வீடியோவை snapchat ஐடி அல்லது snap code உடன் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளர்களுக்கு ஜியோ நிறுவனத்தின் இலவச ரீசார்ஜ் வழங்கப்படும் எனவும், அதிகப்பட்சமாக இலவசமாக தாய்லாந்து வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  மும்பை-புதுக்கோட்டை….மகனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க ஸ்கூட்டரில் பயணம் செய்த தம்பதி:

இந்த போட்டிக்கான கடைசி தேதி பிப்ரவரி 4-ஆம் தேதியாகும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நேதாஜியின் தியாகத்தை நினைவில் கொள்ளவேண்டும்; பிரதமர் மோடி கருத்து !

News Editor

உ.பி-ல் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு ‘குவாரண்டைன்’ மற்றும் ‘சானிடைசர்’ என்று பெயர் வைத்த பெற்றோர்…

naveen santhakumar

குப்பைகளில் கலைவண்ணம்- மேஜிக் செய்யும் மனிதர்..!

naveen santhakumar